நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சா.த பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்த மாணவன் அப்துல் ஜலீல் முஹம்மட் ஹம்தியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எல்.பதுர்த்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
இதில் சம்மாந்துறை வலயக்கல்வி கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.