மாவனல்லை சாஹிரா அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2019


ஷம்ரான் நவாஸ்-
மாவனல்லை சாஹிரா அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (29.03.2019) ஜும்மா தொழுகையின் பின்னர் ஜே நட்சத்திர ஹோட்டலில் தலைவர் திரு. றிப்கான் ரவூப் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இப்போதுகூட்டத்தின் விசேட அம்சங்களாக பல நிகழ்சிகள் நடைபெற்றதோடு, 2019/20 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது. இதன்போது, புதிய தலைவராக திரு. ரிப்கான் ரவுப் அவர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டதுடன் இன்னும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். (விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

கடந்த ஆண்டு திரு. ரிப்கான் ரவூப் அவர்களது தலைமையில் எமது அமீரக்கிளை பல முக்கிய முன்னடைவுகளை அடைந்தது மட்டுமல்லாம் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலையின் பெயரை மீண்டும் அமீரகத்தில் நிலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சிறந்த அடைவுகளை இந்த வருடமும் அடைய எமது மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை சார்பாக உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -