ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிரதேச வேறுபாடுகள் இல்லாது சகல பிரதேச மக்களையும் இணைத்துகொண்டு தனது பயணத்தை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் அந்தப்பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பயணிக்கும் என்றும் 'வன்முறைகளைக் கண்டு பயந்து எமது அரசியல் செயற்பாடுகளிலிருந்து நாம் பின்வாங்கப் போவதுமில்லை என்றும் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்களை பழிவாங்கும் எண்ணமும் எமக்கில்லை என்றும் தொடர்ந்தும் எமது கட்சிப் பணிகள் முன்னெடுக்கப்படும்' எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
கடந்த 2019.03.10 ஆம் திகதி சாய்ந்தமருதில் வைத்து தனது வாகனம் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பிலும், கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் என்ற அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் சம்மந்தமாகவும் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு 2019.03.11 ஆம் திகதி கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் படித்தவர்கள் என பலரும் நிறைந்துள்ள சாய்ந்தமருதில் தனக்கு ஏற்பட்ட நேற்றைய சம்பவம், பலத்த அதிர்ச்சியையும் கவலையையும் எற்படுத்தியதாகவும் குறித்த சம்பவமானது சிலரால் ஏவிவிடப்பட்ட சிலரால் செயற்படுத்தப்பட்டுள்ளதை தான் உணர்வதாகவும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்,
'சாய்ந்தமருதில் இடம்பெற்ற இச்சம்பவம் எனக்கு பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்திய சம்பவமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் சாய்ந்தமருதில் இப்படியான சம்பவம் ஏற்படுவதென்பது வியப்புக்குரியது. ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக சில இளைஞர்கள் வன்முறைகளை கையில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. இளைஞர்களை வன்முறையின்பால் வழி நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் அன்றாடம் சந்தித்து, உறவாடுகின்ற இளைஞர்களை எமக்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறை அரசியலுக்குள் இழுத்துச் செல்வது கண்டிக்கத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி நமது விடுதலை இயக்கம் என்ற அடிப்படையில் கட்சிப் பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், மக்களுக்கும் கட்சிக்கும் இடையிலான தொடர்பு அறுபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், எவ்வித சுயநலமுமின்றி எம்மால் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் பிர்தௌஸ் அவர்களது வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கிளைக் குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கான சிறியதொரு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே எனது கார் உடைக்கப்பட்டது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தமது பிரதேசத்தில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது என்று சொல்வது அரசியலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கை அல்ல. எந்தவொரு அரசியல் வாதியும் வந்து இப்பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகள் செய்கின்றபோதிலும் அதனை நாங்கள் வன்முறையினைக் கொண்டு தடுப்போம், வருகின்ற அரசியல் பிரமுகர்களது வாகனங்களை உடைப்போம், உடலூறு விளைவிப்போம் என்று பயமுறுத்தி அரசியல் செய்ய நினைப்பது மக்களை பிழையாக வழிநடத்துகின்ற செயற்பாடுகளாகும்.
சாய்ந்தமருது மக்கள் அடாவடித்தனத்துக்கு துணைபோகாதவர்கள் என்பதை தான் எப்போதும் கூறிவருபவன் என்று தெரிவித்த சட்டத்தரணி ஆரீப், அங்கு தனக்கு எதிராக இடம்பெற்ற ஈனச்செயலை அந்தமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
எப்பிரதேசத்திலும் எவரதும் அரசியல் நடவடிக்கைகளுக்கு யாரும் தடைபோடமுடியாது என்றும் சாய்ந்தமருது உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளிலும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை விரைவில் தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்குதல்களுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர், இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பிரிந்து நிற்காது எமது ஐக்கியத்தைக் காட்டவேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய வாக்குறுதியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சரியான சந்தர்ப்பத்தில் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.
புலிகளின் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயகத்துக்கு விரோதமான பல போராட்டங்கள் தோல்வியில் முடிவுற்றதாகவும் தனது சகோதர ஊர் மக்களின் போராட்டமும் அவ்வாறில்லாது ஜனநாயகமான முறையில் உள்ளுராட்சிமன்றம் என்ற இலக்கை நோக்கி மட்டுமே நகரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிரேஷ்ட சட்டத்தரணி, பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுவதையோ வீதியால் பயணிப்பதையோ யாரும் தடுக்கமுடியாது என்றும் அவ்வாறு தடுப்பது மார்க்க ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் தனக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சட்டாடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்ற நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்ற போதிலும் அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
கல்முனையில் தமிழர்கள் நிலத்தொடர்பற்ற பிரதேசசெயலக கோரிக்கையை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருவது குறித்து வினவியபோது இலங்கையில் எங்குமில்லாத வகையில் கல்முனைத் தமிழர்கள் நிலத்தொடர்பற்ற பிரதேசசெயலகக் கோரிக்கையை முன்வைத்துள்ளதானது சட்டத்தில் இடம்மில்லாதது என்றும் அவ்வாறு பிரிப்பதானால் அரசு இலங்கையில் பல பிரதேசங்களுக்கு செயலகங்களை ஸ்தாபிக்கவேண்டிவரும் என்றும் தெரிவித்தார்.
'எமது சமூகத்தின் தேசிய இருப்பு, ஏனைய சமூகங்களுடனான சகோதரத்துவ சௌஜன்ய உறவு, தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கே இணைகின்ற நிகழ்வுகள், அதில் வருகின்ற முரண்பாடான நிலைமைகளை எவ்வாறு கையாள்வது' என்பன போன்ற பல செயற்பாடுகள் தொடர்பில் தேசிய அரசியலை சிந்திக்க வேண்டிய தருணத்தில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தை பெறுவது மாத்திரம்தான எங்களது இலக்கு, அதனை நிறைவேற்றிய பின்னர்தான் நாங்கள் மற்றைய விடயங்களை மேற்கொள்வோம் என்றும், அதுவரை முஸ்லிம் காங்கிரஸ் இங்கு அரசியல் செய்யக்கூடாது என்றும் கூறுவது ஏற்புடைய ஒன்றல்ல.
இந்த நடவடிக்கைகளை திட்டமிட்டு வழிநடாத்துகின்ற, தங்களை புத்தி ஜீவிகள் என்று கூறிக் கொள்கின்ற, தங்களுக்குத்தான் இந்த நாட்டினுடைய சகல அரசியல் நடவடிக்கைகளும் தெரியும் என்று சொல்லிக் கொள்கின்ற இந்த நபர்களது நடவடிக்கைகள் சம்மந்தமாக நாங்கள் வெட்கப்படுகின்றோம். பிழையாக ஒரு சமூகத்தை அவர்கள் வழிநடத்துகின்றபொழுது, அதனைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவத்துடன் முற்றுப்பெற்று விடும் என்று யாரும் எண்ணினால் அது பிழையான கருதுகோளாகும். சாய்ந்தமருது மக்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் உள்ள நல்லுறவினை யாரும், ஒரு கல்லினை வீசி வாகனத்தை உடைப்பதன் மூலமோ, எங்களை காயப்படுத்துவதன் மூலமோ அல்லது எங்களை மரணிக்கச் செய்வதனாலோ இல்லாமல் செய்துவிட முடியாது.
முஸ்லிம்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கின்ற எங்களை ஊர் பேதங்களைச் சொல்லிப் பிரிக்க முடியாது. என்னை ஊரின் பெயரால் லேபல் குத்தி பிரித்துப் பேசுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை.
அதாஉல்லா அவர்கள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக இருந்தபோது, அவருக்கான அதிகாரங்கள் முழுமையாக இருந்தபோது அவர் எப்போதோ சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி அலகை பெற்றுத் தந்திருக்கலாம், பலமிக்க அமைச்சராக இருந்து வருகின்ற றிசாட் பதியுதீன், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் களத்தை அமைக்க வேண்டிய தேவையில் இருந்த அவர், அதனைப் பெற்றுத் தந்திருக்கலாம், அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் அதனை வழங்குவதற்கு தயாராக இருந்தார். இவர்கள் எல்லோரும் இதனை இலகுவாக வழங்கியிருக்க முடியும். ஆனால், எல்லோருமே இதனை வழங்காதிருந்தமைக்கான காரணத்தை அறிய வேண்டும். உள்ளுராட்சி சபையை இப்போது நினைத்தால் ஒரு இரவிலேயே அதனை வழங்க முடியும். ஆனால், நாங்கள் பொறுமை காப்பது எமது முஸ்லிம் தேசியம் சார்ந்த பிரச்சினைக்காக என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய இளைஞர் கூட்டத்தை வழிகெடுத்துக் கொண்டிருக்கின்ற இவர்கள், அமைதியாக இருக்கின்ற, நிலைமைகளை விளங்கி வைத்திருக்கின்ற ஏhளமான, பெரும்பான்மையான இளைஞர்களின் உணர்வினை குறைவாக மதிப்பிடுகிறார்கள். இது தாமதமாவதன் நியாயத்தையும், தங்களுக்கு இவ் உள்ளுராட்சி சபை எத்தருணத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.
சரியான விடயத்தினை பிழையான நேத்தில் செய்கின்றபோது, அது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக மாறக்கூடிய நிலைமை இருக்கிறது. எனவே சரியான விடயத்தை சரியான நேரத்தில் மேற்கொள்கின்றபோதுதான் அதன் உண்மையான யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். அவை அதற்குரிய நேரத்தில் நடைபெறும் என்பதை மக்கள் நம்ப வேண்டும். சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி அலகைப் பெறுவதில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை முஸ்லிம் தேசியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்துவதனால்தான், நாம் இதில் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எங்களுக்கிருக்கின்ற உள்ளுராட்சி அலகுகளை மலினப்படுத்தி, அதன் பலங்களை நாங்களாகவே குறைத்து, எங்களுடைய கண்களை எங்களுடைய கரங்களாலேயே குத்திக் கொள்கின்ற விடயமாக இவை இருக்கும் என்பதை ஏன் வன்முறையில் ஈடுபடும் எமது சகோதர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
முகவரி தேடப்போய் முகத்தை அழித்துவிடும் சமூகமாக எமது செயற்பாடுகளை நாம் ஆக்கிக் கொள்ளக்கூடாது' என்று எமது சகோதர இன மக்களது ஆயுதப் போராட்டத்தை உதாரணம் காட்டி பெருந் தலைவர் அஸ்ரப் அவர்கள், வன்முறை நடவடிக்கைகள் எமது சமூகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று கூறியதை இங்கு நான் ஞாபகப்படுத்த வரும்புகின்றேன்.
பிழைகள் இருக்கலாம். ஆனால், சிலவற்றைப் பொறுத்து எமது காரியங்களை நாம் சாதிக்க வேண்டும். வெறுமனே கார்களை கல்லெறிந்து உடைப்பதால் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. இந்த சம்பவத்தில் நான் யாரையும் கோபிக்கவில்லை. பொலிஸ் நடவடிக்கை எடுப்பதற்குக் கூட நான் விரும்பவில்லை. சட்டத்தரணிகளின் பாதுகாப்பு விடயமாகவே பொலிஸில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட வகையில் யாரையும் பழிவாங்கும் எண்ணம் எனக்கில்லை.
இதற்குப் பிறகும் எங்களது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் சாய்ந்தமருதில் முன்னெடுப்போம். இதனை தடுக்க நினைத்து, இதற்குப் பிறகும் வன்முறையில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள், நாங்கள் சமூகத்தை தெளிவுபடுத்தும் போராட்டத்தில் உயிரை விடவும் தயாராக இருக்கின்றோம். மிக விரைவில் எமது கட்சியின் 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்டத்தை சாய்ந்தஅமருதில் முன்னெடுக்கவுள்ளோம் எனவம் கூறினார்.
கல்முனையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழலில் அந்த விடயங்களை இராஜாங்க அமைச்சர் ஹரீஸைத் தவிர முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளமன்ற உறுப்பினர்கள் வாய்திறப்பதில்லையே என வினவியபோது அவ்வாறில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஏனைய முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின்போது கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர்களான ஏ.பஷீர், எம்.ஐ.பிர்தௌஸ், ஏ.நஸார்டீன் மற்றும் வேட்பாளர்களான முபாறக், பாமி ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.