கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.அனீபா தலைமையில் இன்று (02) நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் கௌரவ அதிதியாக பங்கேற்றதுடன் பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடன் இராஜாங்க அமைச்சர்,பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அமோக வரவேற்பளித்தார்கள்.
வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன் போது குறித்த அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டன
சபா, மினா, அரபா, மர்வா என நான்கு இல்லங்கள் அழகுபடுத்தப்பட்டிருந்தன .
பல்வேறு கலை , கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மேலும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப் ,கல்வி இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர், கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.சனூஸ்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட கல்வி உயரதிகாரிகள், பெற்றார்கள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றார்கள்.