மேல்மாகாண ஆளுனர் கௌரவ அசாத் சாலி அவர்களின் அனுசரணையிலும் அசாத்சாலி Foundation இன் உதவியுடனும் புத்தளம் கற்பிட்டி பள்ளிவாசல் துறை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான இலவசச் சீருடை சென்ற மாதம் இப்பாடசாலையின் பழைய மாணவர்களிடம் கொழும்பில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
அவை நேற்று (08) அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் 180 மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதனடிப்படையில் நல்லுதவி வழங்கிய மேல்மாகாண ஆளுனரும் NUA கட்சியின் தலைவருமாகிய கௌரவ அசாத் சாலி அவர்களுக்கும் மற்றும் அசாத் சாலி Foundation நிர்வாகிகளுக்கும், ஊர் சார்பாக பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

