கல்முனை இலங்கை வங்கி வீதியில் இயங்கிவருகின்ற கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு ‘தமிழ் பிரதேச செயலகம்’ மற்றும் ‘வடக்கு பிரதேச செயலகம்’ என சட்டவிரோதமாக பெயர்களைப் பயன்படுத்தி, அதனை தரமுயர்த்த கடற்கரைப்பள்ளி வீதி வரை எல்லை கேட்டுக்கொண்டிருக்கின்ற அநீதிக்கெதிராக கல்முனையன்ஸ் போரம் பல்வேறுபட்ட முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.
கல்முனையின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்சதித்திட்டம் தொடர்பாகவும், இச்செயலகத்தில் அரங்கேறும் நிர்வாக முறைகேடுகள் பற்றியும் தேசிய மயமாக்கும் நோக்கில் மேற்படி விடயத்தினை பல்வேறுபட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் முன்னெடுப்புகளில் கல்முனையன்ஸ் போரம் ஈடுபட்டுவருகின்றது.
அதன் ஒரு கட்டமாக மேற்படி சந்திப்பில் கெளரவ மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி அவர்களிடம் இது குறித்து விரிவான தெளிவுகள் வழங்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
இவ்விடயம் குறித்து நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட தன்னாலான முழுப்பங்களிப்பையும் வழங்கவுள்ளதாக உறுதிமொழியள்ளித்தார்.