98 தனி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்ச்சி

பானா. தங்கம் – மஸ்கெலியா நிருபர்-
ந்திய அரசாங்கத்தின் 113 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உடகட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கொத்மலை ஹெல்பட தோட்டத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவரோடு இலங்கைக்கான இந்தியத தூதுவர் தரஞ்சித்சிங் சந்து, கண்டி இந்திய உதவித் தூதுவர் திரேந்திரசிங் காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார் அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஷ், ஆலோசகர் எம். வாமதேவன், மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைர் சந்திரா சாப்டர், “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள். அதிதிகள் வரவேற்கப்பட்டு திரைநீக்கம் செய்து வீடுகள் திறந்து வைக்கப்படுவதையும் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -