கிழக்கு மாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த நாட்களில் விஜயம் மேற்கொண்டு வந்த இவரை கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களின் பிரதிநிதிகள் களுதாவளையில் நேரில் சந்தித்து பேசினர்.
அவர்களுக்கு மாத்திரம் அன்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் வயதாகி வருகின்ற நிலையில் தொண்டராசிரியர்களுக்கான நியமனத்தை உடனடியாக தாருங்கள் என்று உருக்கமாக கோரினார்கள்.
இவர்களின் வேண்டுகோளை பொறுமையாக செவிமடுத்த இராஜாங்க அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் உள்ள 700 இற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து உள்ளது, அமைச்சரவை பத்திரம் மூலமாக இவர்களுக்கான நியமனத்துக்கு வழி செய்யப்படுகின்றது, அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டதும் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் என்றார்.