கம்பஹா மாவட்டத்திலிருந்து நூறு பேர்கள் அடங்கிய சிரேஷ்ட பிரஜைகள் குழுவொன்று, இன்று (12) யாழ்ப்பாண மாவடத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில், இக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் இக்குழுவினரை, இம்மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட சிரேஷ்ட பிரஜைகள் குழுவினரால் வரவேற்கப்படவுள்ளனர்.
இக்குழுவினர் (12,13,14) மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் தங்கி, இம்மாவட்டத்திலுள்ள சரித்திர, சிறப்பு, வரலாற்றுப் புகழ் மிக்க பல இடங்களைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இவர்களுடன் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பிரஜைகள் குழுவினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பிரஜைகள் குழுவினருக்கும், யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரஜைகள் குழுவினருக்கும் இடையே, நல்லிணக்க நண்பர்களுக்கு இடையிலான சிறப்புச் சந்திப்பு மற்றும் கலாச்சார பரிமாற்ற விசேட நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.