தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 1987.06.01ஆம் திகதி வவுனியா சூடுவெந்த குளம் கிராமத்தில் பிறந்தார்.மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி போது27 வயதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்ததில் இவரது இடுப்பிற்குக்கீழ் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.32 வயதுடைய இந்த இளைஞன் திருமணம் முடிக்காத நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019-02-01ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கி அனுராதபுரம்,புத்தளம் வழியாக 4ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று கொழும்பைச் சென்றடைந்து சுதந்திர தின நிகழ்வில் பங்குபற்றிவிட்டு அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
கொழும்பில் இருந்து காலி,மாத்தறை,ஹம்மாந்தோட்டை,வெல்லவாய ஊடாக கதிர்காமம்,பொத்துவில் வழயாக அக்கறைப்பற்று நிந்தவூர் வழியாக மாளிகைக்காடு,சாய்ந்தமருது கல்முனையை சனிக்கிழமை மாலை வந்தடைந்தார் இவர் பயணித்த வழியில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் இவரை அன்புடன் வரவேற்று ஆதரவு வழங்கியதாக மகிழச்சியுடன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு மருதமுனையை வந்தடைந்தார் இங்கு பிரபல தொழிலதிபர் எம்.ஐ.ஏ.பரீட் தலைமையில் அஷ்ஷெய்க் ஏ.அபுஉபைதா மதனி,மருதமுனையைச் சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் உள்ளீட் வர்த்தகர்களும்,கழகங்களின் பிரதிநிதிகளும் இவருக்கு மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி அன்புடன் வரவேற்றனர்.
இங்கு இவர் கருத்துத் தெரிவிக்கையில்;:- எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமையாகவும்,நல்லுறவுடனும் வாழ வேண்டியது மிகவும் அவசியமாகும்.கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டால் எமது எதிர்கா சந்ததிகளின் ஒற்றுமை சீர்குலைந்து விடும்.எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
மேலும் மாற்றுத் திறனாளிகளின்; உரிமைகளை அரசாங்கமும,;சிவில் சமூகமும் சரிவர நிறைவேற்ற வேண்டும.; மாற்றுத் திறனாளிகள் செல்கின்ற பொது இடங்ளில் அவர்களுக்கான எந்த வசதிகளும் அவற்றை செயற்படுத்த வேண்டும்
கல்முனையில் இருந்து நேற்று தொடங்கியது இவரது பயணம் மட்டக்களப்பு,திருகோணமலை,ஊடாக புல்மோட்டை முலலைத்தீவு வழியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையவுள்ளார் இதுவரை 2000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பயணம் நிறைவு பெற இறைவனைப் பிரார்த்திற்போம்.