அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பசுமைச்சூழல் வேலைத்திட்டம்

எஸ்.எம்.அறூஸ்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் "பசுமையான சூழலினை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில்" மரநடுகை திட்டம் அக்கரைப்பற்று முல்லைத்தீவு வீதியின் இரு மருங்கிலும் நேற்று மாலை (10.02.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பீ.கே. ரவீந்திரன், தரமுகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபல் ஆகியோர் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
மரநடுகை திட்டத்திற்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ,தாதிய பரிபாலகர், தாதிய உத்தியோகத்தர்கள் , சுகாதார உதவியாளர்கள் மற்றும் சன் ரைஸ் விளையாட்டுக்கழகம், ஏஸ் விளையாட்டக்கழகம், வை.எம்.எம்.ஏ அமைப்பு ஆகியவற்றுடன் முல்லைத்தீவு ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர், அக்கரைப்பற்று வோக்கர்ஸ் அமைப்பினர் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் 2019ம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் மற்றுமொரு செயற்றிட்டம் இதுவென்பதுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை 2018ம் ஆண்டிற்கான ஜனாதிபதி பசுமை விருதினை பெற்று வெற்றியடைந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -