வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைருக்கும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (11) திருகோணமலை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தம்பலகாமம் உட்பட்ட பிரதேசங்களில் வீடுகள் அமைத்தல், மலசல கூடம் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக விளக்கினார்.
இப்பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக மிக விரைவில் தன்னால் முடியுமான தேவைகளை நிறைவேற்றித் தருவதாக இதன்போது வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.