மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா!

அஸீம் கிலாப்தீன்-
கில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை (14) அதிபர் நூர் நளீபா சலீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சிறப்பதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முஜிபுர் ரஹ்மான் எம்.பி , மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் உட்பட கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -