கலாபூஷணம் விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்

ருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெற்றார்.2019-01-29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்விலேயே இவருக்கு இந்த கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது.

இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த மர்ஹ_ம் பத்துமுகம்மது ராவுத்தர் பீர்முகம்மது மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை ஆமினா உம்மா தம்பதியின் இரண்டாவது புதல்வராவார்.

2018ஆம் ஆண்டுக்கான அரச உயர் விருதான கலாபூஷண விருதைப் பெறும் மருதமுனையைச் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனாப் பீர்முகம்மது முகைதீன் அப்துல் காதர்(பி.எம்.எம்.ஏ.காதர்)1957ஆம் ஆண்டு மார்கழி மாதம் 27ஆம் திகதி பிறந்தவர்.இவர் 30 வருடங்களாக ஊடக மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு கவிதை,கட்டுரை,விமர்சனம்,நேர்காணல் உள்ளீட்ட பல்வேறு படைப்புக்களையும் சமூக மேம்பாட்டுக்கா எழுதி வெளியிட்டு வருகின்றார்.இவர்1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'அன்னை"என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை மித்திரன் வாரமலர் பத்திரிகையில் பிரசுரமானது முதல் எழுத்துலகில் பிரவேசித்தார்.

அன்று முதல் இன்று வரை இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் பிராந்திய செய்தியாளராக் கடமையாற்றுகின்றார் இவற்றுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்களுக்கும் செய்தியாளராக் கடமையாற்றுவதுடன் மருதமுனை ஒண்லையின் இணையத் தளத்தின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிகின்றார்.மர்ஹ_ம் எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட எழுச்சிக்குரல் பத்திரிகையில் செய்தி எழுத ஆரம்பித்து எம்.பௌமி அவர்களை ஆசிரியராக் கொண்டு வெளிவந்த தினமணி பத்திரிகையின் மருதமுனை நிருபராக நியமனம் பெற்று இன்று வரை தனது எழுத்துப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.இதுவரை இவர் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும்,இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் ஆர்.பாரதி அவர்களின் வழிகாட்டலில் வெளிவந்த“கிழக்கின் குரல்”பகுதியில் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளராகவும்,ஆசிரிய பீடத்தின் இணைப்பாளராகவும் பணியாற்றிய பே.ஜயகணநாதன் (ஜனா)அவர்களின் நெறிப்படுத்தலில் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் தொடர்ச்சியாக 53கட்டுரைகளை எழுதியவர்.மெட்ரோ நியூஸ்"வீரகேசரி வாரவெளியீடு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக இருந்த வி.தேவராஜ் அவர்களின் வழிகாட்டலில் இணை ஆசிரியராக பணிபுரிந்த சூரன் ஏ.ரவிவர்மா அவர்களின் நெறிப்படுத்தலில் 2011ஆம்; ஆண்டு தொடக்கம் 2012ஆம்; ஆண்டு வரை”விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் தொடர்ச்சியாக 125 வாரங்கள் கட்டுரைகளை எழுதிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இவற்றுடன் தினகரன், தினகரன் வார மஞ்;சரி,வீரகேசரி, வீரகேசரி வார வெளியீடு, விடி வெள்ளி,நவமணி,சுடர் ஒளி,தமிழ்த்தந்தி, முஸ்லிம் முரசு உள்ளீட்ட பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

2010ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும்,பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார் தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.அதே போன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்;திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2016ஆம் நடைபெற்ற உலக இஸ்லாமி தமிழ் இலக்கிய பொன் விழா மாநாட்டில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தால் இவரது ஊடக.மற்றும் இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.இவை தவிர தேசமானிய,சாமஸ்ரீ உள்ளீட் இன்னும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.



கலாபூஷண விருதினைப் பெற்றுக்கொண்ட மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இம்போட்மிரர் இணையத்தளத்தின் ஆலோசகர்களில் ஒருவருமான பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு இம்போட்மிரர் நிருவாகத்தினர் வாசகர்கள் சார்பாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -