தங்களின் பிரதேசம் நீண்டகாலமாக அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கபட்டதாகவும் , மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு நகரசபை கோரிக்கையை முன்வைத்த நாளிலிருந்து அரசியல்வாதிகளால் நாங்கள் புறக்கணிக்கபடுகிறோம். இதனால் இப்பிரதேசம் அபிவிருத்திகளில் பின்தங்கியுள்ளது என குறிப்பிட்டனர் .
மேலும் இச் சந்திப்பில் பாடசாலை ,கல்வி அபிவிருத்தி சுகாதாரம் வைத்தியம் ,விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த விடயங்களை செவிமடுத்த ஆளுநர் அவர்கள் இந்த விடயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து பாடசாலை மற்றும் ஏனைய துறைகளுடைய முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததோடு இவ்விடயம் தொடர்பான செயலாளர்கள், பணிப்பாளர்கள் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து குறிப்பிட்ட பிரதேச அறிக்கைகளை உடனடியாக சமர்பித்து அவசரமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கானுமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.