டங்களால் சிறுபான்மையினர் பல நன்மைகளை அடைந்துள்ளனர்,
இன்னும் முஸ்லிம் மக்களிடையே என்னை ஒரு இனவாதி என்று சுட்டிக்காட்டும் பல திட்டமிட்ட பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றை யாரும் நம்ப வேண்டாம், இவற்றுக்கு பின்னால் பல சக்திகள் உள்ளன, அவர்களின் நோக்கம் இந்நாட்டில் இனங்களிடையேயான உறவை சீர்குலைப்தேயாகும், எனக்கு முஸ்லிம்களுனான நீண்டகால உறவு உள்ளது, நான் படையினருக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் கூட எனது மிக நம்பிக்கைக்கு உரியவராக நான் நியமித்து இருந்த்து, ..ஒரு முஸ்லிம் அதிகாரியையே ஆகும், அதேபோல் நான் பிறந்த ஊருக்கு அருகில் இருந்த்து, ஒரு முஸ்லிம் கிராம்ம் ஆகும், அதுமட்டுமின்றி, மஹிநரத ராஜபகரஷ அவர்களின் தலைமையிலான அரசில் மேற்கொள்ளப்பட் ட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒப்பந்தக்கார்ர்களாகவும் அதனை நிறைவேற்றவும் நாங்கள் பல முஸ்லிம்களை நியமித்திருந்தோம், அத்தோடு, எமது ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வசித்த சேரிப்புற மக்களுக்கான அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களில், சில திட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமே உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்த்து, அந்த வகையில் நாம் யாருக்கும் துரோகம் இருக்க வில்லை, அது போலவே புத்தளத்தில் இன்று இடம்பெறும் குப்பை தொடர்பான திட்டம் பற்றி எங்களிடம் இருந்த அணுகுமுறையும் வேறுபட்டது, அது மக்களைப்பாதிக்காத முறையில் சமூக, சமயத் தலைவர்களின் அங்கிகாரதரதுடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து, ஆனால் அவை இன்று கவனத்திற் கொள்ளப்பட வில்லை,
அந்தவகையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் எமது எதிர்கால அரசியல் ,அபிவிருத்தித் திட்டங்களிலும் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும், அதன்மூலமே இந் நாடரடை வளமிக்க நாடாக மாற்றி அமைக்க்முடியும் என்பதே தனது இலக்காகும் என தெரிவித்தார்,
இந் நிகழ்வில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கணக்காய்வாளர் கள், விரிவுரையாளர்ரகள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ,அவற்றைத் தீர்ப்பதற்கான வழு முறைகள் பற்றியும் கலந்துரையாடினர், இரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற இச் சந்திப்பு மிக முக்கிய முடிவுகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும் தருவதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.