சாய்ந்தமருது-
இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வினை வழங்கும் பொருட்டு இன்றைய அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் பற்றி பேசப்படுகின்றது.
இந்நாட்டின் முழு இறைமையும் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்தது. அதன்பின்பு இங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களை இரண்டாம்தர பிரஜைகளாகவே சிங்கள அரசாம்கம் கையாண்டது. இதனாலேயே இனப்பிரச்சினை உருவானது.
தமிழர்களை போன்று முஸ்லிம்களும் இரண்டாம்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டார்கள். அன்று முஸ்லிம்களுக்கு முற்போக்கான அரசியல் தலைமைத்துவம் இருக்கவில்லை.
அதனால் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் சார்ந்தும், வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்கள் சிங்கள அரசியல் கட்சிகளுடனும் தங்களது அரசியல் பயணத்தினை மேற்கொண்டார்கள்.
அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்கு சோரம் போனவர்களாக காணப்பட்டதுடன், முஸ்லிம்களின் தனித்துவமும், அரசியல் அபிலாசைகளும் மௌனிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வேண்டி சாத்வீக போராட்டங்களை மேற்கொண்டபொழுது அது இரும்புக் கரம்கொண்டு அடக்கப்பட்டதனால், வேறு வழியின்றி தனி நாடாக பிரிந்து செல்வதே ஒரே வளி என்ற கொள்கையில் ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமையினை அடைந்து கொள்ள முயற்சித்தனர்.
தமிழர்கள் சாத்வீகரீதியில் உரிமை போராட்டம் நடத்தியபோது தமிழர்களை ஏமாற்றும் நோக்கில், இந்நாட்டினை மாறி மாறி ஆட்சி செய்துவந்த பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் தமிழர் தரப்பினருடன் பலவகையான ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.
ஸ்ரீ.ல.சு. கட்சியினர் ஆட்சியில் தமிழ் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கான முயற்சிகளை மேற்கொண்டால், அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.கட்சியினர் குழப்பியடிப்பதும், அதேபோல ஐ.தே.கட்சியினரின் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை ஸ்ரீ.ல.சு கட்சியினர் குழப்பியடிப்பதுவுமே தொடர்கதையாக இருந்து வருகின்றது.
சுருக்கமாக கூறினால் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் சர்வதேசத்தினை ஏமாற்றும் நோக்கில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க முற்படுவதுபோல பாசாங்கு செய்வதும், பின்பு எதிர்க்கட்சியினை தூண்டிவிட்டு குழப்பியடிப்பதும் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற ஓர் அரசியல் ஏமாற்றாகும்.
அதுபோலவே ஆயுத போராட்டம் நடைபெற்றபோது ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், பெரும் எடுப்பில் போராளிகளுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொள்வதாக காட்டிக்கொண்டார்கள்.
பின்பு சமாதான காலங்களில் பேச்சுவார்த்தை மூலமாக இதயசுத்தியுடன் அதிகார பரவலாக்கல்களை வழங்காமல், காலத்தை இழுத்தடித்துக்கொண்டு போராட்ட இயக்கங்களை பிளவுபடுத்தி அவர்களை பலயீனப்படுத்தவே முயற்சித்து வெற்றியும் கண்டார்கள்.
தொடரும்...........................................