தம்பலகாம பிரதேச செயலக பிரிவின் சிறாஜ் நகர் பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் ,பாடசாலை மைதானம் ஷாலிஹாத் ஜும்மா பள்ளி மதில் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பல மில்லியன்கள் ரூபா செலவில் இப் புதிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உட்கட்டமைப்பு கிராமிய அபிவிருத்தி திட்டத்தை அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கில் இக் குறித்த செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல கிராமிய அபிவிருத்தி ஊடாக பல திட்டங்கள் நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த அபிவிருத்தி திட்டங்களை கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.
இவ் புதிய அபிவிருத்தி நிகழ்வுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எம்.றஜீன், தாலிப் அலி ஹாஜியார் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார வேட்பாளர்களான ஆபிலூன், ஏ.எச்.எம். ஆசீக் ,ஏ.சீ.நஜிமுதீன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.