கிழக்கு மாகாணத்தில் பயிர்ச்செய்கையில் அண்மைக்காலமாக படைப்புழுவினால்;; ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விவசாயம் மற்றும் அத்துறையைச்சார்ந்த அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் உயர்மட்ட மாநாடு (26) நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சோளப்பயிர்ச்செய்கையில் அம்பாறை மாவட்டத்திலேயே படைப்புழுவின் தாக்கம் அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்ட 12 ஆயிரத்து 850 ஹெக்டேயரில் 8035 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது. இது 62.5 சதவீதமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்ட 967 ஹெக்டேயரில் 476 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது. இது 50 சதமான பாதிப்பாகும்
திருகோணமலை மாவட்டத்தில் 780 ஹெக்டேயரில் சோளன் பயிரிடப்பட்டது. இதில் 594 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- கரடியனாறு விவசாய பயிற்சிப்பண்ணையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் விவசாய திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டாக்டர் எஸ்எம். ஹ{ஸைன், பூச்சியியலாளர் எஸஆர். சரத்சந்திர, விவசாய ஆராய்ச்சி திணைக்கள அதிகாரி எல்கேஎஸ்பீ. குமார ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
விவசாய திணைக்களம், கமநல திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம்மற்றும் பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.