அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும் , தொடரச்செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்தஅரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்புவிழாவின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாட்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்ட நாட்களாகவுமே இருந்தன.இந்தப் போராட்டத்திலே வன்னி மாவட்டத்தில் பிரசவித்த எமதுகட்சியானது களத்தில் நின்று ஜனநாயகத்தை உயிரூட்டுவதற்கும் அரசியலமைப்பில் விழுந்த ஓட்டையை ஒட்டுவதற்கும்பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. எங்களுக்கு அரசியல் அதிகாரம் தந்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்குமே இந்த பெருமையும் கெளரவமும் கிடைக்கின்றது.
இந்த இருண்ட நாட்களிலே நமது அரசியல் முடிவடைந்து விட்டது என பலர் பகற்கனவு கண்டனர். அமைச்சு அதிகாரத்தைபிடுங்கி எடுத்ததனால் நாம் அவர்களுக்கு அடிபணிவோம் என சிலர் தப்புக்கணக்குப்போட்டனர், அச்சுறுத்திப்பார்த்தனர்.வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கினர். நாம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை நிறுத்தி அதற்கு பதிலாக புதியவேலைத்திட்டங்களை புகுத்தி , அடிக்கல்லை கூட நாட்டினர்.அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து எப்படியாவதுதமது அணியில் எமது கட்சியை ஈர்த்துக்கொள்ள வேண்டுமென துடியாய் துடித்தனர். பணத்தையும் பதவியையும்தந்து, தாம் ஏற்படுத்திய ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதிலே பாடாய்ப்பட்டனர் .எனினும்நானும் எனது கட்சி எம்.பி க்களும் இதற்கெல்லாம் விலை போகவில்லை.மசியவும் இல்லை.இவற்றுக்கெல்லாம் நாம்சோரம்போயிருந்தால் இன்று நம் நாட்டின் அரசியல் அமைப்பு கேலிக்கூத்தாகியிருக்கும் ஜனநாயகம் செத்துமடிந்துஎதேச்சதிகாரம் கோலோச்சியிருக்கும்.
வன்னி மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியானது இன்று இறைவனின் உதவியினால் வியாபித்து ஆட்சிஅதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நமது தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாகவும் இன்றுமாறியிருக்கின்றது.இந்த சிறிய கட்சியின் பலம் என்ன என்பதை நாட்டுத்தலைவர்களும் சர்வதேசமும் இந்த 52நாட்களுக்குள் உணர்ந்து இருப்பர். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் அமோக ஆசனங்களையும் சபைகளையும் பெற்ற கட்சியொன்றும் ஓரணியில் நின்ற போதும் நாம்அவர்களை எதிர்த்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் அணியில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றோம். சிறுபான்மை மக்களின் பெருமளவில் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனநாயகத்தை பேணுவதில் பெற்ற வெற்றி சிறுபான்மைமக்களையே சாருகின்றது.
கடந்த காலங்களில் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பழக்கப்பட்ட நமது கட்சியும் தலைமைத்துவமும் அண்மையஅரசியல் பிரளயத்தில் ஏற்பட்ட சவால்களுக்கும் எளிதில் முகம்கொடுக்க முடிந்தது. நாங்கள் தேர்ந்து எடுத்த பாதைசரியானது என்பதை நீதிமன்றமும் தீர்ப்பின் மூலம் அறிவித்தது.
துன்பங்களையும் , துயரங்களையும் ஏற்று பல தசாப்தங்களாக போராடி வந்த வன்னி மாவட்ட மக்களுக்கு தற்போதுஓரளவு நிம்மதி கிடைத்த போதும் அவர்களின் வாழ்க்கையிலே இன்னும் விடிவில்லை. இருக்க வீடுகளில்லாமலும்வாழ்வாதாரமில்லாமலும் பலர் கஷ்ட்டப்படுகின்றனர். நமக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன.அரசாங்கம் மீண்டும்தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்னர் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக பல வாக்குறுதிகள்வழங்கப்பட்டிருக்கின்றன தமிழ் மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சித்த போது சில அரசியல்தரப்புகள் அதற்கு இடம்தரவில்லை தற்போது இந்த பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் பிரதமரிடம் சில பொறுப்புகள்இருப்பதால் நாமும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளும் இணைந்து வீடில்லா பிரச்சினை உட்பட பல அடிப்படைபிரச்சினைகளுக்கு இந்தவருட இறுதிக்குள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். வீடில்லா பிரச்சினையைதீர்க்க சில ஆரம்பக்கட்ட முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ,மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர்செல்லத்தம்பு, முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் ,அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் றிப்கான் பதியுதீன் , வன்னிமாவட்ட இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ,கட்சியின்முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.