துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (25) காலி துறை முகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பிரதியமைச்சராக பதவியேற்றது முதல் துறை முகங்களுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். திருகோணமலை, ஒலுவில் துறை முகங்களுக்கும் கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டு குறைபாடுகள் மற்றும் புதிய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்தமையும் தற்போது ஆராய்ந்தும் வருகிறார்.
காலி துறை முகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலைமைகள் தொடர்பில் வதிவிட முகாமையாளர் டீ.கே.ஜீ.எல்.ஹேமசந்ர உடன் பிரதியமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் சீமெந்து பொருட்களை பார்வையிட்டார்.