கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ் அவர்களினால் கிண்ணியாவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான இலவச குடி நீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் இன்று (04) பெற்றுக் கொடுக்கப்பட்டன.
சில குடும்பங்களுக்கே இவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
கிண்ணியா நகர சபை பகுதிகளில் வாழும் இன்னும் பல குடும்பங்களை இணங்கண்டு குடி நீர், மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ் இதன் போது தெரிவித்தார்.
இக் கையளிப்பு நிகழ்வில் சமூக ஆர்வலர் றியாஸ் உட்பட பயனாளிகள் என பலரும் பங்கேற்றார்கள்.