கலாபூஷணம் விருது பெறும் பிராந்திய ஊடகவியலாளர்


மினுவாங்கொடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான ஐ. ஏ. காதிர் கான், அரச கலாபூஷணம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு தாமரை தடாக அரங்கில், (29) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின்போதே, சிரேஷ்ட ஊடகவியலாளரான இப்றாஹீம் அப்துல் காதிர் கான், விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார். 

மெளலவி (அரபிக்) டிப்ளோமா (1981), ஊடகத்துறை டிப்ளோமா (2000), சுற்றாடல் ஊடகத்துறை டிப்ளோமா (2001) ஆகிய டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ள காதிர் கான், ஊடக சேவையில் (1981 முதல்) 35 ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -