அம்பாறை மாவட்ட மருத்துவத்துறையில் தமிழ்மாணவன் ஜினுசான் முதலிடம்!




காரைதீவு நிருபர் சகா-
வெளியான கபொத உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி உயிரியல்துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவன் செல்வராஜா ஜினுசான் 3ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.
பெரியகல்லாற்றைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் அதிபர் செல்வராஜா தம்பதிகளின் புதல்வராவார்.தாய் ஒர் ஆசிரியை. இருவரும் கணித விஞ்ஞானப் பட்டதாரிகளாவர்.
ஆரம்பக்கல்வியை பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தில் கற்று உயர்தரத்திற்கு கல்முனை பற்றிமாக்கல்லூரிக்கு வந்தவர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப்பெற்று வலயத்தில் 3ஆம்
இடத்தைப்பெற்ற அவர் க.பொத சா.தரப் பரீட்சையில் 9ஏ
சித்திகளைப்பெற்றிருந்தார்.

அவர் கருத்துரைக்கையில்: நான் ஒரு நரம்பியல் நிபுணராக வரவேண்டுமேன்பதே ஆசை. பணத்தை
மையமாக்ககொள்ளாமல் மக்களுக்கு இத்துறைமூலம் சேவையாற்றவேண்டுமென்பதே எனது ஆசை.

அதற்காக மனத்தை ஒருநிலைப்படுத்தி இரவு 9மணி முதல் நள்ளிரவுகடந்து 3மணிவரைபடிப்பேன். மாதிரி விளாத்தாள்களை கட்டயாம் செய்யவேண்டும்.தவணைப்பரீட்சைகளை தவறவிடக்கூடாது. குறிப்பாக நல்லவர்களை நண்பனாக்கிகொள்ளவேண்டும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -