அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பணிப்புரையின் பேரில் கல்வியமைச்சு நாடு தளுவிய ரீதியில் இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் போதை பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பது சம்பந்தமாக விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாரம் 21 ஆம் திதி முதல் 25 ஆம் திகதி வரை தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கமைய பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இன்று ( 23 ) பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் பொலிஸார் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டீ.எம்.பாறூக் , களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன , களுவாஞ்சிகுடி வீதி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச்.ஜீ.தயானந்த , பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.