நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இன்று பணி பகிஷ்கரிப்பு.

முஹம்மட் ஜெலீல்-
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை நேற்றைய முன்தினம் 22-01-2019, வைத்தியர் ஒருவரை தாக்க முற்பட்டு வைத்தியரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் ஒருவருக்கு எதிராக 24-10-2019, இதுவரைக்கும் எதுவித நடவடைக்கைகளும் மேற்கொள்ளாத பட்சத்தில் இன்று நிந்தவூர் வைத்திய ஊழியர்கள் அனைவரும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்நிலையில் இன்று "கிளினிக்" நடைபெறும் நாள் என்பதினால் அதிகளவான நோயாளிகள் அங்கு வருகைதந்து கிகிச்சை நடைபெறாது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ள பரிதாப நிலையை காணாமுடிந்தது.
இப்பணிபகிஷ்கரிப்பு ஒருபுறம் நியாயம் என்று நினைப்பினும் மறுபுறம் இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை உணரவேண்டியுள்ளது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை என்பது கொளரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களால் ஓர் நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டு அதில் மக்கள் பிரயோசம் அடையவேண்டுமென்று நினைக்கையில் இவ்வைத்தியசாலைக்கு நிந்தவூர் மக்களாகிய நாம் நமது ஒத்துளைப்பை வழங்கி அதனை இன்னும் உயர்வடையச் செய்ய வேண்டிய கட்டாய கடமையில் உள்ளோம். இதுபோக இவ்வைத்தியசாலைக்கு கலங்கம் ஏற்படச் செய்யும் எவராகினும்அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரை சம்மாந்துறை பெலிசார் வலைவீசி தேடிவருகின்ற நிலையில் இது தொர்பாக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -