உலக நாடுகளின் அஜந்தாவில் போதைப்பொருள் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றது என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான யூ.எல்.அஹமட் தெரிவித்தார்.
இவ்வருடத்திற்காண கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று (1) ம் திகதி கழகக் காரியாலயத்தில் இடம்பெற்றது அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,
போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் கூடுதலாக முஸ்லிம் பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ளது அந்தளவு இளைஞர்கள் அப்பாவனைக்கு அடிமைப்பட்டுக் காணப்படுகின்றார்கள்.
இவ் வியாபாரத்தையும், பாவனையையும் யாராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாதவொரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இவ் விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவொரு நிலையினை நம்மால் காண முடிகிறது.
இவ்வாறாக இவ் போதைப்பாவனையும், விற்பனையும் தொடருமாகவிருந்தால் எதிர்காலத்தில் இளைஞர் சமூகம் இவ்வுலகில் இருப்பார்களா என்பது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.
இளைஞர்கள்தான் எதிர்கால சந்ததிகள் எனவே நீங்கள்தான் இந்த சமூகத்துக்காக, நம் பிரதேசத்திற்காக, குடும்பத்திற்காக நல்லவொரு பிரஜைகளாக வாழவேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.