கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.ஏ.நிசாம் மிண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல.எ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை காலமும்(4மாதகாலம்) கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்ட எம்.கே.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். ஜனாப் மன்சூர் கடந்த 10ஆம் மாதம் 3ஆம் திகதி கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.சுமார் 4மாதகாலம் பணியாற்றியிருந்தவேளை இன்று அவர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட்ட உதவிச்செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
பணிப்பாளர் நிசாம் சுமார் 8வருடங்கள் மாகாணக்கலவிப்பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் சகோதரரான நிசாம் இதற்கு முன்னர் நீண்ட காலம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.