அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தை வண்மையாகக் கண்டிக்கிறேன் -அமைச்சர் அகில விராஜ்

ம்முறை க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தை சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டமை தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்தை வண்மையாகக் கண்டிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்;
உயர் தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் போது தேசிய பாடசாலை மற்றும் சர்வதேச பாடசாலை எனப் பிரித்து நோக்க வேண்டும் என்பதே பந்துல குணவர்தனவின் கருத்தாகவுள்ளது. சர்வதேச பாடசாலை மாணவர்கள் சர்வதேச மட்டத்திலான பரீட்சைக்கு மாத்திரமே தோற்ற வேண்டும் என்பதே அவரது கூற்றாகவுள்ளது. அவர் அமைச்சராக இருக்கும் போது சர்வதேச பாடசாலை மாணவர்கள் எவருக்கும் தேசிய மட்டத்திலான பரீட்சைகளுக்கு இடம் வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார். சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெறுபேறுகளை தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெறுபேறுகளுடன் இணைத்துக் கொள்வது இலவச கல்வியை கீழ் நிலைக்குத் தள்ளும் என்பதே பந்துல குணவர்ன எம்.பியின் வாதமாகும்.

பல வருடங்களாகக் கல்வி அமைச்சராகவும் தனியார் வகுப்பு ஆசிரியராகக் கடமை புரிந்த பந்துல குணவர்ன கூறும் கருத்து அடிப்படை தகைமையற்றதுடன் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலாகும். தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகச் சிறார்களின் கல்வியைப் பயன்படுத்துவது வெட்கேடான முயற்சியாகும்.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கல்வி பயிலும் சம உரிமை என்பது ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையர் என்ற வகையில் நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேசிய மற்றும் சர்வதேச பாடசாலைகளிலோ அல்லது வேறு ஏதும் பாடசாலைகளிலோ கல்வி பயில்வதற்கும் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கும் எந்தத் தடையும் கிடையாது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடும் போது பாடசாலை, இன, மத பேதங்களின் பிரகாரம் பிரித்து பெறுபேறுகளை வெளியிடும் முறைமை ஜனநாயக சமூகத்தில் ஒருபோதும் கிடையாது. பந்துல குணவர்ன கூறுவது போன்று பரீட்சை பெறுபேறுகளை பிரித்து வெளியிடப் பரீட்சைகள் திணைக்களத்தினால் முடியாது என்பதனை நினைவூட்ட விரும்புகின்றேன்.

பக்கச்சார்பற்ற நிறுவனமான பரீட்சை திணைக்களத்தைச் சுயாதீன செயற்பட இடமளிப்பதனை விடுத்து அதன் செயற்பாடுகளின் மீது அத்துமீறி அமைச்சர் என்ற வகையில் என்னால் தலையிட முடியாது. தன்னுடைய பதவிக்காலத்தில் சர்வதேச பாடசாலை மாணவர்கள் இவ்வாறு உயர் பெறுபேறுகளை எடுக்கவில்லை என பந்துல குணவர்தன கூறுவதானது பரீட்சை திணைக்களத்தின் வினாத்தாள் திருத்த பணிகளில் அத்துமீறி தலையீடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏனையவர்களுக்குத் தோன்றுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

மாணவர்களுக்கு அரச அல்லது தனியார் பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கான பூரண உரிமை உள்ளது. அதனை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. கடந்த காலங்களில் காட்சிப்படுத்தலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலவச கல்வி தற்போது செயற்திறன்மிக்க பெறுபேறுகளை பெறும் அளவுக்கு தலைமைத்துவம் வழங்கப்படுகின்றது. இதன்படி அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோன்று உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்கல், விஞ்ஞான ஆய்வுக் கூடம் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும் விஞ்ஞான ஆய்வுக் கூடம் வழங்கல், கணினி வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கல், அனைத்து மாணவர்களுக்கும் சுரக்க்ஷா காப்புறுதி திட்டம் ஆகியன இலவச கல்வியை பாதுகாப்பதற்கான நோக்கத்தின் பிரதிபலன்களாகும். மேற்குறிப்பிட்ட திட்டங்கள் படிப்படியாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

இலவச கல்வி, மாணவர்களுக்கான இலவச சீருடை, இலவச பாடபுத்தகம், மதிய உணவு போன்ற சலுகை வழங்கி அனைத்து மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் என்ற வகையில் பந்துல குணவர்தனவின் கருத்தை நான் நிராகரிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.டைசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -