இலக்கியச் செம்மல் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் கலாபூஷணம் விருது பெறுகிறார்


29ம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெறும் விருது விழாவில் சிரேஷ்ட சட்டத்தரணி இலக்கியச் செம்மல் ரஷீத் எம். இம்தியாஸ்; கலாபூஷணம் விருது பெறுகிறார்.

கண்டி உடுதெனியவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ரஷீத் எம் இம்தியாஸ் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழ்பவர். பல்வேறு வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்களிப்புச் செய்து வரும் இவரது ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவரான இவர் இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளரும் தேசிய சூரா சபை, முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் உறுப்பினருமாவார். மிக விரைவில் 'சட்டமும் நாமும்' எனும் நூலை வெளியிட காத்திருக்கும் இவர் உடுதெனியவைச் சேர்ந்த மர்ஹூம்களான அல்ஹாஜ் எம்.எம். ரஷீத் - உம்மு ஸல்மா ரஷீத் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -