அஷ்ரப் ஏ சமத்-
இந்திய முஸ்லிம் இளைஞா் லீக்கின் தலைவரும் இந்திய முஸ்லீம் லீக்கின் தேசிய பொருளாளருமான எம். கே. முஹம்மத் யுனுஸ் நேற்று (28) நாரேகேன்பிட்டியில் உள்ள அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைவா் செயலளாளா் மற்றும் உறுப்பிணா்களை சந்தித்து கலந்துரையாடினாா்.
இச் சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான முஸ்லிம் வாலிப முண்னிகளது வருடாந்த மாநாடுகள் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதுபற்றியும் இரண்டு அமைப்புக்களுக்கிடையே ஜக்கிய சந்திப்புக்களை ஏற்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் இளைஞா் வருடாந்த மாநாட்டில் இந்த அமைப்பிண் நிர்வாக அங்கத்தவா்களுக்கும் அவா் அழைப்பு விடுத்தாா். இலங்கையில் உள்ள அமைப்பின் செயற்பாடுகள் நாடுமுழுவதில் முள்ள கிளைகள் ஸ்தாபக தலைவா் மர்ஹம் பாக்கீா் மாா்க்கா ஆரம்பித்த இந்த இயக்கம் 42 வருடங்கள் முடிவந்திருப்பதையிட்டு அவா் பாராட்டு தெரவித்தாா். எதிா்காலத்தில் 50 வருடம் வரை இதனை விஸ்தரித்து எதிா்கால இளைஞைகளிடம் இவ் ஸ்தாபணத்தினை கையளித்து மீண்டு வளா்த்தெடுக்க தன்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்து தருவதாகவும் அவா் அங்கு உறுதியளித்தா்.