இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதர உதவிகள்

மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு
ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

ந்த வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஊடாக வாழ்வாதர உதவிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்
மன்னார் நானாட்டான் புதுக்கம கிராமத்த்கில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் (25) அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது
சொந்தமாகவும் சுயமாகவும் மக்கள் மக்கள் வாழ வேண்டும் என்பதட்காகவே இவ்வாறான ஆக்க்பூர்வமான திட்டங்களை அமைச்சு நடைமுறை படுத்தி வருகின்றது நாடு முழுவதும் இந்த திட்டம் விஸ்த்ரிக்கப்படுவதுடன் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வாழ்வாதர உதவிகளை வழங்கி வருகின்றோம்
இந்த அமைச்சினை மீண்டும் பொறுப்பு ஏற்ற பின்னர் வாழ்வாதார உதவிகளை அதிகரிக்க உதவுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று கொண்டிருக்கிறார்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலே நாம் பல்வேறு ஆக்க பூர்வமான நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அதனை மேலும் வியாபிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்
அந்த வகையில் வீடற்றோருக்கான பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்
இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ரஞ்சன், இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -