கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் நுஸ்ரான் பின்னூரியின் குழப்பத்தைத்தவிர்ப்போம்


 -கல்குடா முஸ்லிம் வைத்தியர்கள் சங்கம்-  
எம்.ரீ.எம்.பாரிஸ்-
ல்குடா முஸ்லிம் வைத்தியர்களின் சமூக சேவைகள் அமைப்பு கல்குடா முஸ்லிம் மக்களுக்கு விடுக்கும் ! அவசர வேண்டுகோள்!

இன்று வெள்ளிக்கிழமை (25.01.2019) வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல், ஓட்டமாவடி அக்பர் பள்ளிவாயல், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களில் (நுஸ்ரான் பின்நூரி) என்பவரைக்கொண்டு ஜும்ஆ குத்பா உள்ளிட்ட பயான் நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நபரால் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இந்த நபரைக் கொண்டு நடாத்தப்படும் நிகழ்வை சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களின் நிர்வாகத்தினர் தவிர்ந்து கொள்ளுமாறு கல்குடா முஸ்லிம் வைத்தியர்கள் சமூக சேவைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இந்நபர் இஸ்லாமிய சமூகத்தவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், வைத்தியர்களுக்கெதிராகவும், வைத்திய சிந்தனைகளுக்கும் நவீன வைத்திய முறைகளுக்கெதிராகவும் உண்மைக்குப்புறம்பான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், மனித உயிராபத்தை ஏற்படுத்துவதற்கு காரணமான பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ளும் நபராவார்.
இவர் விடயத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நேற்று 24.01.2019ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற கல்குடா முஸ்லிம் வைத்தியர்களின் ஊடக சந்திப்பின் போது இவர்கள் கருத்தினை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சமூக நலன்கருதியும் ஒற்றுமையாக வாழும் கல்குடா முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படக்கூடாதென்ற நன்னோக்கில் இக்கருத்துக்களை வைத்தியர்கள் மக்களுக்குத்தெரிவித்துள்ளனர். மேலும், எமது பிரதேசத்தின் வைத்தியர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும் சமூகத்துக்கு மத்தியில் இந்நபரால் ஏற்படவிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்குமுகமாக நடாத்தப்படும் நிகழ்வுகளை பொது மக்கள் புறக்கணிக்குமாறு கல்குடா முஸ்லிம் வைத்தியர்களின் சமூக சேவைகள் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
மேலும், வைத்தியர்களுக்கெதிராகவோ அல்லது சமூகத்தை குழப்பும் வகையில் குறித்த நபரால் கருத்துக்கள் பகிரப்பட்டால் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பதைக்கருத்திற்கொள்ளவும்.

பொறுப்புள்ள அனைவரும் இதனை உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -