சம்மாந்துறை வலய சமாதான தைப்பொங்கல் விழா இன்று(25) வெள்ளிக்கிழமை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதியாக கிழக்குமாகாண மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
தமிழர் பண்பாடு கலாசார முறைப்படி வரவேற்பு இடம்பெற்று வயலில் அறுவடையுடன் புத்தரிசி இட்டு பொங்கி வழிபாடு இடம்பெறும்.
பின்பு மேடைநிகழ்ச்சிகள் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தலில் நடைபெறும்.
சம்மாந்துறை வலயத்துதைச்சேர்ந்த தேசிய மாவட்ட சாதனை மாணவர் நால்வர் பாராட்டிக்கௌரவிக்கப்படவிருக்கின்றனர். அதேவேளை தேசிய நீரிழிவுதினப் போட்டியிலும் சிறந்த அறிக்கையில் போட்டியிலும் அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஒரேயொரு பாடசாலையான ஸ்ரீ கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயம் பாராட்டப்படவுள்ளது.
மூவின மாணவர்களின் கலைகலாசார நிகழ்சிகள் மேடையேறவுள்ளன என நிகழ்ச்சி இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி. வி.நிதர்சினி தெரிவித்தார்.