அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் பிரசித்த நொத்தாரிசாகவும் விளங்கும் இவர் ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் உல்லாசப் பிரயாண துறையில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றவராவார் என்பதுடன் மும்மொழிகளிலும் திறமையும் புலமையையும் மிக்கவராவார். மக்கள் வங்கியின் பல பகுதிகளில் பிரதேச தலமைக்காரியாலய சிரேஸ்ட சட்ட ஆலோசகராகவும் கடமை புரிந்த இவர் மறைந்த மாமனிதர் மு.கா. வின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் அமைச்சின் இணைப்புச் செயலாளராக அன்னாரின் இறுதிக்காலம் வரையும் பணியாற்றியவராவார்.
அகில இலங்கை சமாதான நீதவானாகிய இவர் பல்வேறு அரசியல் சமூகப்பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் பல பிரபல அரசியல் வாதிகளின் வெற்றிக்கு பின்னால் இயங்கியுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளராகவும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராகவும் அதன் அமைப்பாளராகவும் கட்சியின் மஜ்லிஸ் சூறாவின் உப தவிசாளராகவும், ஒழுக்காற்றுக்குழுவின் தலைவராகவும் இருந்து தற்போது கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் அக்கட்சியின் பிரதித் தலைவராகவும் உள்ளார்.
பல நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச மகாநாடுகளில் கருத்தரங்குகளிலும் பங்கு பற்றியதுடன் அண்மையில் சீனாவில் இடம்பெற்ற சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தி மகாநாட்டிலும் கட்சியின் சார்பில் கலந்து கொண்டார். பல இஸ்லாமிய இயக்க அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றியதோடு கல்முனை அக்கரைப்பற்று சட்டத்தரணிகளின் சங்கங்களின் செயலாளராகவும் இதன் சிரேஸ்ட பிரதித் தலைவராகவும் பல பதவிகளை வகித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி : அகில இன நல்லுரவு ஒன்றியத்தின் மனங்களின் சங்கமம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -