மதிய உணவுக்காக வாங்கிய பார்சலில் மட்டத்தேள் -யாழில் சம்பவம்(வீடியோ)


பாறுக் ஷிஹான்-

திய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய பார்சலில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று(25) மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று உணவினை பிரித்து பார்த்த போது கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது.

இதனால் கோபமடைந்த அவர் வாடிக்கையாக செல்லும் குறித்த உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
எனினும் குறித்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளரை உதாசீனம் செய்ததுடன் உணவுப்பார்சலை மீளப்பெற்று வீசி அச்சுறுத்தியுள்ளார்.

தனது முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள அவ்வுரிமையாளர் மீது வாடிக்கையாளர் பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாட்டினை செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -