சாய்ந்தமருது கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல்-ஹிலால் வித்தியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் பாடசாலை வளாகத்திலிருந்து பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். வைசால் தலைமையிலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத்தின் நெறிப்படுத்தலிலும் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
இதேவேளை, விழிப்புணர்வு ஊர்வலத்தில் எதிர்கால சந்ததியாகிய எங்களை போதைப் பொருட்களிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உதவி செய்யுங்கள், புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம், ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம், எங்களின் எதிர்காலத்தை கொலைசெய்யாதீர் போன்ற பல சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சாய்ந்தமருது பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயனெத்தி, சுகாதாபரிசோதகர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.