மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவும்,4வது அல்-ஹாபிழ்; மற்றும் 1வது மௌலவி பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் 2019-02-02ஆம்; திகதி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்த வெளியரங்கில் காலை 8.00 மணி தொடக்கம் பகல் 1.00 மணிவரை நடைபெறவுள்ளது.
அந்நஹ்ழா அறபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில் விழா நடைபெறவுள்ளது.கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.அபுஉபைதா மதனி முன்னிலையில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்,நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல,;உயர்கல்வி அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளர்.
முதன்மை அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி (முப்தி),ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் அகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதன்மைப் பேச்சாளராக ஸம்ஸம் பவுண்டேசனின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.எச்.யூசுப்(முப்தி),கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க்.எம்.ஆர்.அப்துல் மலீக்(நழீமி) ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க்.எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி) ஆகியோருடன் கல்லூரி நிருவாகிகளும், உஸ்தாத்மார்களும், மாணவர்களும், ஊர்பிரமுகர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பட்டம் பெறும் மௌலவிமார்களும்,அல்ஹாபிழ்களும்,மருதமுனை மஸ்ஜிதுல்; கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து விழா நடைபெறும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
நான்காவது அல்-ஹாபிழ் பட்டம் பெறுவோர்-2019
அல்-ஹாபிழ் முகம்மது மன்சூர்.முகம்மது முஸக்கிர்,அல்-ஹாபிழ்.முஹம்மத் இஸ்ஸதீன் அஸ்றிப் அஹ்மத்,அல்;-ஹாபிழ்.இமாம் முஹம்மட் ஸிம்தி அப்துள்ளாஹ்,அல்-ஹாபிழ்.இஸ்ஸதீன் முஹம்மட் சுறாப்,அல்-ஹாபிழ்.நஸ்ருடீன் முஹம்மட் நிப்லான்,அல்-ஹாபிழ்.முஹம்மட் றஸூல் முஹம்மட் ஸியாப்,அல்-ஹாபிழ்.முஹம்மட் றஸூல் முஹம்மட் முன்ஸிப்,அல்-ஹாபிழ். முஹம்மட் ஜெரீன் நப்லி ஜௌஸான்,அல்-ஹாபிழ்.முஹம்மது ஜமால்தீன் முஹம்மட் ஸாஹிதுல்லா,அல்-ஹாபிழ்.பறகத் அலி ஸஹாப்தீன்,அல்-ஹாபிழ். முஹம்மது றாபிக் முஹம்மட் ஹஸ்ஸான்,அல்-ஹாபிழ்.முஹம்மட் அஸ்றின்,அல்-ஹாபிழ். அப்துல்; றகுமான் முகம்மது அஸ்ஜத்,அல்-ஹாபிழ். சைபுதீன் முகம்மது றழீப், அல்-ஹாபிழ்.கலிலுர் றகுமான் அஸ்றி,அல்-ஹாபிழ்.அலி ஜின்னாஹ் முகம்மது பஸ்கீன்,அல்-ஹாபிழ்.முகம்மது சுஐப் முகம்மது ஹப்பாப்,அல்-ஹாபிழ். முகம்மது சினான் அப்துல் றகுமான் சுதைஸ்,அல்-ஹாபிழ்.இஸ்மாயில் முகம்மது கேஸ்மல்,அல்-ஹாபிழ்.முகம்மது சரீப் இஹ்ஸானுல் ஹாதி,அல்-ஹாபிழ். நஸார் முகம்மது ஹிஜாஸ், அல்-ஹாபிழ்.முகம்மது ஹனீபா ஹம்தான் அஹமத்.
அல்-ஆலிம் ஷரீஆ கற்கை நெறியினை பூர்த்தி செய்து முதலாவது (நஹ்ழி) பட்டம் பெறும் உலமாக்கள்-2019;
அஷ்ஷெய்க் அப்துல் சமது அப்றத் அஹமட், அஷ்ஷெய்க் அப்துல்; றஷீட் அல்-ஸஜான், அஷ்ஷெய்க் கலீலுற் றஹ்மான் ஆலிம் சாபித், அஷ்ஷெய்க் முஹம்மது அஸ்வர் முஹம்மது இப்றாஜ்,அஷ்ஷெய்க்,அல்ஹாபிழ் ஆதம்பாவா முஹம்மத் ஷிம்லி,அஷ்ஷெய்க் அமானுள்ளா ஸஜான், அஷ்ஷெய்க் ஜஃபர்; பஹீம் அஹ்மத்.