அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட 159வது கிராமமான ”காயத்திரிபுரம் மாதிரிக் கிராமம்” சனிக்கிழமை (26) ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவான ”செமட்ட செவன” மாதிரிக் கிராமம் நாடு முழுவதிலும் 2500 அமைக்கும் திட்டத்தின் கீழ் இக் கிராமம் 159வது கிராமமாகும்.
கடந்த 3 வருடங்காலத்திற்குள் அம்பாறை மாவட்டத்தில் 10 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ் வீடமைப்புத் திட்டத்தில் 35 வீடுகளைக் கொண்ட வீடமைப்புக் கிராமத்தில் இலவசமாக காணிததுண்டுகள், வீட்டுத் தோட்ப் பயிா்செய்கை, உள்ளக வீதிகள், குடிநீா், மிண்சாரம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அமைச்சா்கள் ,பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனா்.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அமைச்சா்கள் ,பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனா்.