144வது மாதிரிக் கிராமமான புத்தளம், புளியங்குளம் ”ரண்வியன்புர” வீடமைப்புப் திட்டம்

அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் 144வது மாதிரிக் கிராமமான புத்தளம், புளியங்குளம் ”ரண்வியன்புர” வீடமைப்புப் திட்டம் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தேசிய வீடமைப்புத் திட்டமான நாடு முழுவதிலும் 2019ஆம் ஆண்டுக்குள் 2500 மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தில் இவ் வீடமைப்புத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது 24 மாவட்டங்களிலும் 1000 கிராமங்களது நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ் வீடுகள் இந்த புதிய வருடத்தின் இறுதியில் அணைத்தும் மக்களிடம் கையளிக்கப்பட்டு விடும் என அமைச்சா் சஜித் தெரிவித்தாா்
இவ் வீடமைப்புத் திட்டத்தில் 19 வீடுகளும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரச காணித்துண்டுகளும் தோட்டங்கள் பயிா்செய்கைக்காகவும் காணிகள் இலவசமாக வழங்கப்பட்டன. மற்றும் உள்ளக வீதிகள், நீர்விநியோகத் திட்டம் மிண்சார ம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன் இப் பிரதேசத்தில் உள்ள வீடற்ற் 200 குடும்பங்களுக்கு பல்வேறு வகையிலான வீடமைப்புக் கடன்களும் வழங்கப்பட்டன. மேலும் 50 இளைஞா் யுவதிகளுக்கு சுயதொழில் வங்கிக் கடன்திட்டம், நிர்மாணத்துறையில் ஈடுபடுதவதற்காக பயிற்சி ஆயுதங்கள் கொண்ட பொதிகளும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ரங்கே பண்டார தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சாகர பலன் சூரிய, மற்றும் மக்கள் பிரநிதிகளும் கலந்து கொண்டனா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -