மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த முகத்தாடை மற்றும் வாய்ப்புற்று வைத்திய நிபுணர் வைத்தியர்பீ.அனுஷன் மதுஷங்க, கண் வைத்திய நிபுணர் வைத்தியர் வருண விஜயசிறிவர்த்தண, பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.துஷ்யந்தன், பல் சத்திரசிகிச்சை வைத்தியர்களான கே.முரளிதரன், கே.கிருசாந்திணி, கே.மேகநாதன், ரீ.கேதீசன்,பீ.துஷிதா, எம்.வி.அப்துல் வாஜித், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.இஸ்மாயில் உள்ளிட்டவைத்தியர்கள் அடங்கிய குழாமினரும், வைத்திய உத்தியோகத்தர்களும் வருகை தந்து மக்களுக்கு முற்றிலும் இலவசமானவைத்திய சிகிச்சைகளையும், ஆலோசணைகளையும் வழங்கி வைத்தனர்.
இதில் வாய்ப்புற்று, முகத்தாடை, கண் பரிசோதனை, பொது வைத்திய பரிசோதனை, பல் வைத்தியப் பரிசோதனைகளானபல் பிடுங்குதல், பல் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், கிளிப் போடுதல் போன்ற சிகிச்சைகளுடன் தொற்றா நோய்கள்தொடர்பான சிகிச்சைகள், சீனி பரிசோதனை உள்ளிட்ட ஏனைய உடற் பரிசோதனைகளும்; மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாபெரும் இலவச வைத்திய முகாமில் சுமார் 1429 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், அரசஉத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு பயன்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச வைத்திய முகாமை நடாத்தி வைக்க முற்றிலும் முன்னின்று செயற்பட்ட மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையைச் சேர்ந்த முகத்தாடை மற்றும் வாய்ப்புற்று வைத்திய நிபுணர் வைத்தியர் பீ.அனுஷன் மதுஷங்க, கண்வைத்திய நிபுணர் வைத்தியர் வருண விஜயசிறிவர்த்தண ஆகியோருக்கு அட்டாளைச்சேனைவை.எம்.எம்.ஏ யினால் ஞாபகச் சின்னங்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.