ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இரு ஊடக செயலமர்வுகள் மாவனல்லை ஆஇஷா சித்தீகா மற்றும் மாவனல்லை சாஹிரா ஆகிய பாடசாலைகளில் (01) சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மாவனல்லையில் இடம்பெற்றது.
மாவனல்லை ஆஇஷா சித்தீகா மாணவிகளுக்கான செயலமர்வு ஆஇஷா சித்தீகா பெண்கள் கலாசாலையிலும் மற்றும் மாவனல்லை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தெரிவு செயப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்துடன் இணைந்து சாஹிரா ஆரம்ப வித்தியாலய கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போரத்தின் 61 மற்றும் 62 ஆவது செயலமர்வுகளில் நாட்டில் அனுபவம் வாந்த முன்னணி ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஓய்வு பெற்ற அதிபரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி, முன்னாள் உபபீடாதிபதியும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலைவாதி கலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில், விடிவெள்ளி ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், அல் - ஹஸனாத் ஆசிரியர் ஜெம்சித் அஸீஸ், ஊடகவியலாளர் பெரோஸ், சிஷே்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் ஆகியோர் விரிவுரையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் பாரியார் ரீஸா ஹமீதுல்லாஹ், முன்னாள் அமைச்சர் அதாவுட செனவினரத்தின, போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர், பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆஸிக் நிஸாமுதீன் மற்றும் பழைய மாணவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஸாகிர், ஆதில் அலி சப்ரி, நுஸ்கி முக்தார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் விரிவுரையாளர்களால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் போரத்தின் தலைவர் கலாபூஷணம் என்.எம் அமீன், ஊடகத்துறை ஊடாக கேகாலை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மற்றும் தென்றல் அலைவரிசை முன்னாள் பணிப்பளார் மர்ஹூம் நூராணியா ஹசன், சிரேஷ்ட ஊடகவியலார் மர்ஹூம் உயன்வத்தை ரம்ஜான், மூத்த ஊடகவியலாளர் றிஸ்கி ஷெரீப், வசந்தம் செய்தி ஆசிரியர் சீத்தீக் ஹனீபா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் ஆகியோர் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக செயலமர்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு போரத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் பாரியார் ரீஸா ஹமீதுல்லாஹ் ஆகியோர் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரினால் கல்லூரியின் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கல்லூரியின் பிரதி அதிபரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.