அமெரிக்காவில் இயங்கிவரும் MAKE A WISH எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதிதீவிரமான நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறுவர்களின் ஆசைகளை என்னவென்று கேட்டறிந்து அதை நிறைவேற்றுகின்ற நல்லதோர் பணியினை குறித்த நிறுவனம் செய்துகொண்டு வருகின்றது.
அந்த நிறுவனத்தினூடாகத்தான் ஆர்ச்சி சில்லர் என்று சொல்லப்படுகின்ற இந்தச் சிறுவன் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்ச்சி சில்லர் பிறந்த மூன்று மாதமாகியிருந்த நிலையில் இருதய நோயால் அவதிப்பட்டிருக்கின்றார் அவருக்கு இதுவரைக்கும் பதின்மூன்று சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரைக்கும் குறித்த இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிராபத்தில் இருப்பது அந்தச் சிறுவனுக்கு தெரியாதுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஆர்ச்சி சில்லர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டங்களில் அவரிடம் கேட்கப்பட்டது உன்னுடைய விருப்பம் என்னவென்று அதற்கு அவர் கூறியுள்ளார் எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும், அதிலும் அவுஸ்திரேலியா அணியில் தலைவராக இருக்கவேண்டும் என்று தன்னுடைய ஆசைகளை கூறியுள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்டது நீங்கள் துடுப்பாட்ட வீரரா பந்துவீச்சாளரா என்று அதற்கு அச் சிறுவன் நான் ஒரு இடதுகைப் பந்து வீச்சாளர் என்று சொல்லியிருக்கின்றார். அதிலும் இந்தியா அணியின் வீரர் விராத் கோலியை ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவருடைய ஆசைகளையும், எதிர்பார்ப்புக்களையும் MAKE A WISH எனும் நிறுவனம் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிடம் தெரியப்படுத்தியதன் பின்னர் அவ் அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அணி தலைவர்கள் ஒன்றிணைந்து நல்ல மனிதநேயமிக்க முடிவை எடுத்து அதன் மூலமாகத்தான் இந்த ஆர்ச்சி சில்லர் என்று சொல்லப்படுகின்ற இந்தச் சிறுவன் ஏழு வயதிலே இந்திய, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான Boxing Day டெஸ்ட் போட்டியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு தேசிய ரீதியில் ஒரு வீரருக்கு எனென்ன வசதிகள் போட்டியின் போது செய்து கொடுக்கப்படுமோ அத்தனை விடயங்களும் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தனது ஆசைகளை அடைந்துகொண்ட சிறுவன் ஆச்சி சில்ரர் அவுஸ்திரேலியா அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் அதில் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் சிக்சர்களை அடிக்கவேண்டும், பந்துவீச்சில் விக்கட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று அவர் சக வீரர்களுக்கு அறிவுரைகள் கூறியுள்ளார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு சர்வதேச ரீதயில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.