நிந்தவூரில் கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று (28) மாலை 06 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய போதை வஸ்துக்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரத்நாயக்கா உள்ளிட்ட குழுவினர் நிந்தவூர் பிரதேசத்தில் கஞ்சா கோப்பி விற்பனை செய்த வீடு ஒன்றை சுற்றி வளைத்தபோது போதை வஸ்துகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா கோப்பி மற்றும் பக்கட்டுக்கள் பண்ணப்பட்ட 2 கிராம் நிறையுடைய கஞ்சா கோப்பி 35 பக்கட்டுக்களும் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த சுற்றி வளைப்பானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஸாரின் மேற்பார்வையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.