இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சைபெற்றாலும் பரவாயில்லை- மைத்திரியை சாடும் சரத் பொன்சேகா


நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (05) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்பெயரை விளித்து விமர்சித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பொன்சேக்கா ஜனாதிபதியாகியிருந்தால் இவ்வாறு கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதிபோல் செயற்பட்டிருக்கமாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரியிருக்கமாட்டேன். தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன். வாரம் ஒரு தடவை வெளிநாட்டுக்கு பயணம் செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை மகளின் பெயரில் வெளியிட்டிருக்கமாட்டேன்.
அதேவேளை, இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி பேசிவருகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத் தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும். இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சைபெற்றாலும் பரவாயில்லை. அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் கூட திருத்தம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -