அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களாகிய நாம் முதலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் நன்றி கூறவேண்டும். கடந்த ஐம்பது நாட்களாக இவர்கள் அரசியல் அமைப்புக்கு மாற்றமாக செய்த வேலைகளால் ஐக்கிய தேசிய கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. தூங்கிகொண்டிருந்த யானைகளை இவர்கள் தட்டி எழுப்பி விட்டார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஸவின் விசுவாசிகளே அமைச்சர்களாக இருந்தனர். இவர்களே நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தனர். உதாரணமாக எமது மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஜனாதிபதிக்கு எதிராக உழைத்தவர் பிரதி அமைச்சராகவும் இருந்தார்.
இவ்வாறான நிலை நாடு முழுவதும் காணப்பட்டதனால் எமக்கு மக்களுக்கு திருப்திகரமான சேவையை செய்ய முடியவில்லை. திருடர்களை பிடிக்க முடியவில்லை, அரசியல் பழிவாங்கல் வழங்க முடியவில்லை, வேலைவாய்ய்ப்பு வழங்கமுடியவில்லை, பட்டதாரிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம் வழங்க முடியவில்லை.
இதற்கு துணையாக ஜனாதிபதி இருந்ததை கடந்த ஐம்பது நாள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் அமைக்கப்பட்டு எமக்கு எதிராக செயற்பட்ட கறுப்பாடுகள் துரத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே ஜனவரி மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்த பணிகளுக்கு ஜனாதிபதி தடைகளை ஏற்படுத்தினால் அடுத்த வருடம் முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்கும். ஜனாதிபதி தேர்தலை நடாத்தி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியை கொண்டு அந்த பணிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.