திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாக காணப்படுகின்றது.
இவ்வீதியானது தோப்பூரிலிருந்து பள்ளிக்குடியிருப்பு,தங்கபுரம், கட்டைபறிச்சான் இறால்பாலமூடாக மூதூரைச் சென்றடையும் பிரதான வீதியாகும், இவ்வீதியானது பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், ஸ்ரீனிவாசபுரம், சின்னக்குளம், இத்திக்குளம், பாட்டாளிபுரம், வீரமாநகர் நல்லூர் கிராம மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றது.
அத்துடன் தோப்பூரூடாக மூதூரைச் சென்றடைவதற்கு குறைந்த தூரம் என்பதனால் நாளொன்றுக்கு அதிகமான பொதுமக்கள் பயன்படுத்துவதோடு தி/மூ/கலைமகள் இந்துக்கல்லூரி, ஸ்ரீ கணேச வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெருந்தொகையான அரச ஊழியர்களும் பயன்படுத்துகின்றனர் இவர்கள் தனமும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவே இப்பிரதேச மக்களின் நலன் கருதியியும்,பிரயாணிகளின் நலன் கருதியும் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.