திருகோணமலை மஹதிவுல்வெவ, மற்றும் மொறவெவ, பிரதேச வைத்தியசாலைகளுக்கு சுத்தமான குடிநீரை குடிநீரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நோயாளர்களும், நோயாளர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மொரவெவ பிரதேசத்தில் 8500 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் ரொட்டவெவ, மஹதிவுல்வெவ, கம்பகொட்ட, மயிலகுடாவெவ,தெவனிபியவர,
திம்பிரிவெவ,பன்குளம், நாமல்வத்தை போன்ற கிராமங்கள் காணப்படுவதாகவும் அக்கிராமங்களில் உள்ள பல நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அதிகளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கே வருகை தருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் மொறவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திலும், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லாமையினால் நோயாளிகளின் உறவினர்கள் தூர இடங்களுக்குச் சென்று குடிநீரை பெறக்கூடிய நிலை ஏற்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அசுத்தமான குடிநீரை சில நேரங்களில் குடித்து வருவதாகவும் நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும் எனவும் நோயாளர்களும் உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.