சாய்ந்தமருதில் புகைப்படஙகள் மற்றும் அரும் பொருட்கள் அடங்கிய கலைக் கண்காட்சி (17) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் விதாதா வள நிலையத்தில் இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச கலாசார பிரிவும் கலாசார அதிகார சபையும் இணைந்து இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஷானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருமான மருதூர் ஏ. மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர்,சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவர் ஏ.எம்.பீர்முஹம்மட், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்சான்,கலாசார உத்தியோகத்தர் எம்.அம்சத், சமுர்த்தி உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் எமது நாட்டின் புராதன சின்னங்கள் மற்றும் பிரதேசங்களின் புகைப்படங்கள், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களும், அரும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.