புதிய அரசாங்கம் பதவியேற்றதினால் பொருளாதாரத்தில் எந்தவித பின்னடைவும் இல்லை!!


2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாத காலத்திற்கு அரசாங்கத்தின் செலவீனத்தை ஈடுசெய்தற்கு அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கை மூலம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் இதனை குறிப்பிட்டார். இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தயசிறி ஜயசேகர , அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மற்றும் பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமீபத்தில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாமையினால் இதற்கு முன்னர் மற்றும் பொதுவான சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்பட்ட எடுத்துக்காட்டான நடைமுறைகளுக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அங்கீகரிக்கப்படும் வரையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் அரச சேவைகளை தொடச்சியாக முன்னெடுக்கும் பொருட்டு தேவையான வரவு செலவு மானியத்தை இடைக்கால கணக்கறிக்கையின் vote on account மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இதற்கான பரிந்துரையை தயாரிப்பதற்கும் திருத்த சட்டத்தை முன்னெடுப்பதற்குமாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இவ்வருடம் டிசம்பர் மாதம் வரைக்கான அரசாங்க செலவினத்தை சமாளிப்பதற்கு போதுமான நிதி ஏற்கனவே 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின்மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் இதனால் அரச நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்குவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு ஜனவரி மாதத்திலிருந்து 3 மாத காலத்திற்கு அரசதுறை செலவினத்திற்கு தேவையான நிதியை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கையிருப்பில் உள்ள நிதிமூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கடனை திருப்பிசெலுத்துவதற்கான விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். அவர் கூறுவதுபோல் எந்தவித சிக்கலும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டை நம்பியே வெளிநாடுகள் நிறுவுனங்கள் கடன் வழங்குகின்றன. பதவியிலிருக்கும் அரசாங்கம் அதனை திருப்பி செலுத்தவேண்டும். இதுவே உலகளாவிய ரீதியிலான நடைமுறையாகும். மக்களை தவறான திசையில் இட்டுச்செல்வதற்கு சிலர் முற்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையவில்லை. இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரக்கோன் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -